சென்னை: பசுமை மின் உற்பத்தி நிறுவுதிறனில் இந்திய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
காற்றாலை, சூரியசக்தி ஆகியவற்றின் மூலம் 18,957 மெகாவாட் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது தமிழகம்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான நிலவரப்படி நாட்டில் உள்ள சூரியசக்தி, காற்றாலை, சிறிய மின் நிலையங்களின் மின் உற்பத்தி நிறுவுதிறன் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த நிறுவுதிறன் குறித்து தெரிய வந்துள்ளது.
24,120 மெகாவாட் நிறுவுத்திறனுடன் ராஜஸ்தான் முதலிடத்திலும் 21,977 மெகாவாட் நிறுவுதிறனுடன் குஜராத் இரண்டாமிடத்திலும் உள்ளன.
அந்தப் பட்டியலில் கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
அனைத்து மாநிலங்கள் மூலமாக 1.34 லட்சம் மெகாவாட் நிறுவுதிறனை கொண்டுள்ளது இந்தியா.

