கணவர் உயிரிழந்த 10 நிமிடங்களில் மனைவி உயிரும் பிரிந்தது

1 mins read
7e65bb49-4315-4ab6-92cc-98ade5d814a9
கணேசன், கண்ணம்மாள் தம்பதியர். - படம்: ஊடகம்

திருச்சி: கணவர் இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாத மனைவியும் உயிரிழந்த சம்பவம் திருச்சி மாவட்டம், திருவெரும்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த 80 வயதான கணேசன் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிர் இழந்தார்.

கணவர் உயிர் இழந்ததை அருகில் நின்று பார்த்த மனைவி கண்ணம்மாள் கடும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் ஆளானார்.

தனது கணவரின் அன்பு குறித்தும் குடும்ப பொறுப்பு குறித்தும் மனதுக்குள் அசைபோட்டபடி இருந்த கண்ணம்மாளும் திடீரென மயங்கி விழுந்தார்.

அடுத்த ஓரிரு நிமிடங்களில் அவரது உயிரும் பிரிந்தது. இதனால் கணேசன் இறுதிச்சடங்குக்கு வந்திருந்தவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

கணவர் உயிரிழந்த பத்து நிமிடங்களில் மனைவியும் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்