பேருந்து, ரயில்கள் மூலம் சொந்த ஊர் சென்ற 10 லட்சம் பேர்

1 mins read
24d7a14c-7e53-408f-ba66-23487cdde2ba
ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. - படம்: ஊடகம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பேருந்து, ரயில்கள் மூலம் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

“கடந்த 12ஆம் தேதி முதல் சுமார் 6.4 லட்சம் பேர் அரசு சிறப்புப் பேருந்துகள் மூலமாகவும் ரயில்கள், விமானங்கள் மூலம் 4 லட்சம் பேரும் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

“மொத்தத்தில் ஏறக்குறைய 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்,” என்று அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்