ஆண்கள் மட்டுமே வைத்த பொங்கல்

ஆண்கள் மட்டுமே வைத்த பொங்கல்

1 mins read
8a59017a-7ad9-47d9-893f-635ec1817da9
ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்துப் படைக்கும் திருவிழா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆண்கள் மட்டும் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. நைனார் மண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் ஆண்கள் பொங்கல் வைப்பது வழக்கம்.

இந்தாண்டு அய்யனார் கோவிலில் கூடிய அப்பகுதி ஆண்கள், குளக்கரையில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சாமிக்குப் படையலிட்டு வழிபட்டனர்.

மூதாதையர்களின் வழக்கப்படி இவ்வாறு பொங்கலிட்டால் விவசாயம் செழிக்கும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புது பானையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து கோவில் அருகில் பொங்கல் வைக்கப்பட்ட பின், படையல் வைத்து ஆண்கள் மட்டுமே உண்பார்கள்.

இந்தப் பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நேரத்தில் பெண்கள் வீட்டில் இருப்பார்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்