மஞ்சுவிரட்டில் மாடு முட்டி சிறுவன் உட்பட இருவர் மரணம்

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி சிறுவன் உட்பட இருவர் மரணம்

1 mins read
86fdc6f1-cef3-47b8-97eb-96d86ed0061e
சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் இருவர் உயிரிழந்தனர். - படம்: தமிழக ஊடகம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பாஸ்கர் என்ற 13 வயது சிறுவன் உயிரிழந்தார்.

மஞ்சுவிரட்டுக்கு வெளியே அவிழ்த்து விடப்பட்ட மாடு முட்டியதில் அச்சிறுவன் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

அடையாளம் தெரியாத மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்தார்.

மேலும்,காளைகள் முட்டியதில் இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்