திருவள்ளூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் ரேக்ளா குதிரைப் பந்தயம் நடைபெற்றது.
இம்முறை 55 குதிரைகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த குதிரைகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியைக் காண பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் போட்டியில் பங்கேற்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கரவொலி எழுப்பினர்.

