தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

40% பேருக்கு நீரிழிவு, ரத்த அழுத்த பாதிப்பு: பரிசோதனையில் தகவல்

1 mins read
e7470f04-2b81-447f-9539-dec8a56e2958
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்து தெரியவில்லை. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை தொடர்பான விவரங்களை தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார்.

திருச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தர்மபுரி, சென்னை ஆகிய ஐந்து மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்ததில் 40 விழுக்காட்டினருக்கு புதிதாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக செல்வ விநாயகம் தெரிவித்தார்.

மேலும், தங்களுக்கு உள்ள பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்