சென்னை: இண்டியா கூட்டணி ஆட்சியின் தொடக்க மாநாடாக சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளையரணி மாநாடு அமையப்போகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில உரிமைகளைக் காப்பதுதான் இந்தியாவின் உரிமையைக் காப்பது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக இளையரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நாளை (ஜனவரி 21ஆம் தேதி) நடைபெற உள்ளது.
இந்தியா தற்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இம்மாநாட்டில் திமுகவினர் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
“தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும் இண்டியா கூட்டணியின் ஆட்சி, மாநில உரிமைகளை மதிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும், அமையும்,” என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

