தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது

தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது

1 mins read
b4619959-247d-48d7-901c-4112f8a74580
அமைச்சர் மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கணக்கின்படி, ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளுக்கும் 13% என்ற அளவில் இறப்பு விகிதம் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 8.2% ஆகக் குறைந்துள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு குழந்தைகள் நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வந்ததால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றார் மா.சுப்பிரமணியன்.

“சிசு இறப்புகளைக் குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் குழந்தைகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விவரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

குறிப்புச் சொற்கள்