மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் கைது

1 mins read
3dece8b2-80b1-4019-9050-6017e6b244d4
கார்த்திகேயன். - படம்: ஊடகம்

திண்டிவனம்: மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தனியார் பள்ளியின் முதல்வரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே இயங்கி வரும் அந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

மாணவிகளை தனது அறைக்கு அழைத்துச் செல்லும் அவர், தங்களை பல இடங்களில் தொட்டுப்பேசி தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து விவரம் அறிந்த மாணவிகளின் பெற்றோர் வெகுண்டெழுந்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பள்ளி முதல்வர் கார்த்திகேயன் தலைமறைவானார். காவல்துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்