முதல்வர் ஆகும் ஆசை இல்லை: அண்ணாமலை

முதல்வர் ஆகும் ஆசை இல்லை: அண்ணாமலை

1 mins read
7a63dd64-2d11-442a-9be0-6a12888b8b31
அண்ணாமலை. - படம்: ஊடகம்

கோவை: முதல்வர் பதவி மீது தமக்கு ஆசை இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருவது அவர் தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது என்றார்.

“எனக்கு முதல்வராகும் ஆசை இல்லை. பல தலைவர்களை உருவாக்க விரும்புகிறேன். என்னைவிடத் தகுதி வாய்ந்த பல தலைவர்கள் பாஜகவில் உள்ளனர். பதவி ஆசை பிடித்த சில கட்சிகள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் அண்ணாமலை.

குறிப்புச் சொற்கள்