அதிமுகவில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம்

1 mins read
d7f738d7-5cbb-4b88-ad38-618031226cfd
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் காயத்ரி ரகுராம். - படம்: ஊடகம்

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

தமிழக பாஜகவில் தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார் காயத்ரி ரகுராம்.

இந்நிலையில் கட்சியின் மாநிலத் தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார் காயத்ரி. இது தொடர்பாக கட்சியின் தேசியத் தலைமை விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

அவர் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர களப்பணியாற்றுவார் என தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்