தஞ்சாவூர்: தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு 11 பேர் காரில் பயணம் சென்றனர். அவர்களது கார் வெள்ளிக்கிழமை இரவு தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோரா பகுதி வழியே சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பக்கவாட்டில் இருந்த தடுப்புச் சுவர் மீது வேகமாக மோதியதில் காரில் பயணம் செய்த சின்னபாண்டி, 35, பாக்கியராஜ், 60, ஞானம்மாள், 60, ராணி, 40, ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூக்கக் கலக்கத்துடன் இருந்த கார் ஓட்டுநர் சற்று கண் அயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

