புதுடெல்லி: இந்தியாவில் 1.20 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (குளுக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை டாக்டர் அகர்வால் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மருத்துவமனை குழுமத்தின் செயல் இயக்குநர் அஸ்வின் அகர்வால், உலகம் முழுவதும் 7.76 கோடி பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கண் நீர் அழுத்த நோய் பார்வை நரம்புகளைப் பாதிக்கும் என்றும் பார்வை இழப்பு ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோய் பாதிப்பை கண்டறிந்துவிட்டால் பார்வை இழப்பைத் தடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.