தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

1 mins read
4dc38589-9216-488b-960b-ec87d5664781
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார் - படம்: தமிழக ஊடகம்

தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,18,90,348 வாக்காளர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 3,30,96,330; பெண் வாக்காளர்கள் 3,41,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர், என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,60,419 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்துக்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,72,140 ஆவர். 

மாநிலத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டதுடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலை திருத்துவதற்கான வரைவுப் பட்டியல் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. திருத்தங்கள் செய்யவும், புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வரை வாக்களர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நவம்பரில் நான்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இறுதி வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் வரும் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த வாக்காளா் பட்டியல் அரசியல் கட்சியினா் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்