ஆகஸ்டு மாதத்துக்குள் கிளாம்பாக்க புதிய ரயில் நிலையம்

ஆகஸ்டு மாதத்துக்குள் கிளாம்பாக்க புதிய ரயில் நிலையம்

1 mins read
e8a1531c-9425-4cc7-a546-d327344b49b3
கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கின. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்ட வர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், வண்டலூர் - ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில் நிலையப் பணிகள் அண்மையில் தொடங்கின.

ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த நிலையம், மூன்று நடைமேடைகளுடன் அமைய உள்ளது. மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலையக் கட்டடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்