அயோத்தி ராமர் கோவில் படத்துடன் பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து தமிழக ஆடவர் சாதனை

1 mins read
4bd54e0a-780c-4e6b-9c3d-fb456e3f7050
கொடியுடன் குதித்த ராஜ்குமார். - படம்: ஊடகம்

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ராமர், அயோத்தி கோவிலின் படத்துடன் 10,000 அடி உயரத்தில் இருந்து குதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

45 வயதான இவர் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் ஆவார். கடந்த 2016ஆம் ஆண்டு அதிபரின் விருது பெற்றவர்.

இந்நிலையில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் அயோத்தி கோவில், ராமர் உருவப்படம், ஜெய்ஸ்ரீராம் எனும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கொடியுடன் பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து (ஸ்கை டைவிங்) குதித்துள்ளார் ராஜ்குமார்.

இந்தியாவில்தான் இச்சாதனையை நிகழ்த்த வேண்டும் என தான் திட்டமிட்டு இருந்ததாகவும் அதற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கை தேர்வு செய்ததாகவும் ராஜ்குமார் தெரிவித்தார்.

“இதுவரை பதினைந்து முறைக்கும் மேல் ஸ்கை டைவிங் செய்துள்ளேன். ராமர் கோவில் திறப்பு விழாவின்போது ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் தாய்லாந்து வரை சென்று இச்சாதனையை நிகழ்த்தினேன்,” என்று ராம்குமார் மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் இச்செய்தியை பலரும் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்