தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீட் தேர்வுக்கு எதிராக 85 லட்சம் கையெழுத்துகள்

1 mins read
d996d35f-a23f-4124-8f97-242943358ffb
உதயநிதி ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: நீட் ஒழிப்பு என்பது திமுகவின் உரிமை முழக்கமாக மாறியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக 85 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளதாகவும் அவை விரைவில் அதிபரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெறப்போகிற மாபெரும் வெற்றி எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. இளையர் அணியின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களையும், மாநிலம் முழுக்க பொதுக்கூட்டங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்,” என அமைச்சர் உதயநிதி மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்