அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்

1 mins read
ef83a11f-0d6d-41ef-b382-e1b683d7dcf2
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: மக்களவைத் தேர்தலின்போது அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் வெற்றியை நழுவ விட்டால் அமைச்சர் பொறுப்பு நழுவி விடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு தொகுதியிலும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிக்கு உள்ள சாதக, பாதக அம்சங்களை கண்டறியவேண்டும் என்றும், அது குறித்து தேர்தல் குழுவுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“அமைச்சர்களின் மாவட்டம், பொறுப்பு மாவட்டம் ஆகியவற்றில் கட்சி பெறக்கூடிய வெற்றி, தோல்விகளுக்கு அமைச்சர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். கூட்டணியை ஒருங்கிணைத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும்,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரது எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல் திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்