சாதி கைப்பட்டை அணிவது பிற்போக்குத்தனம் - ஆளுநர் சாடல்

சாதி கைப்பட்டை அணிவது பிற்போக்குத்தனம் - ஆளுநர் சாடல்

1 mins read
9204fd24-974c-452f-9444-74f0989a5310
படம்: - தமிழ் முரசு

சென்னை: “நமது இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் சாதி கைப்பட்டை அணிவது பற்றிய செய்திகள் வேதனைப்படுத்துவதாகவும் வெட்கக்கேடாகவும் உள்ளது. இத்தகைய நடைமுறைகள் மற்றும் நடத்தைகள் மிகவும் பிற்போக்குத்தனமானவை” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு நாள் உரையில் தெரிவித்துள்ளார்.

“வட்டார ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்து, உள்நாட்டு அமைதி, நிலைத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்து, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி கடுமையாக உழைத்த ஆயுதப்படையினர், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் காவல்துறையின் வீரம்மிக்க படைவீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மரியாதையை செலுத்துகிறேன்,” என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்