நடுவானில் விமானத்தில் ரகளை: கைதான இளையர்

1 mins read
171ec1af-9903-4970-ba3f-d74f2bf6bb3b
விமானத்துக்குள் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இளையரை விசாரித்தனர்.  - படம்: ஊடகம்

சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த இளையர் ஒருவா் திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

பயணி போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விமானப் பணிப்பெண்கள் இளையரை சமாதானம் செய்த பிறகும் அவா் அடங்காமல் தொடர்ந்து சத்தம் போட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

இதையடுத்து, சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்துக்குள் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இளையரை விசாரித்தனர்.

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரான முகமது அசாருதீன், துபாயில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்ததாகவும் விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்புவதாகவும் கூறினார்.

இதையடுத்து, முகமது அசாருதீனை சென்னை விமான நிலையக் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்