சென்னை: டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சுடன் தமிழக முதல்வர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார். தமிழ் நாட்டிற்கு அங்கிருந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ் நாடு அரசின் சார்பில் முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பயணம் சென்ற அதே விமானத்தில் டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சும் பயணம் செய்தார். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ‘ஆகாயத்தில் ஆச்சரியம்’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

