நடிகர் விஜயகாந்த் பெயரில் தெரு

நடிகர் விஜயகாந்த் பெயரில் தெரு

1 mins read
0a899791-b305-4741-8687-fa2e71f4b972
மறைந்த நடிகர் விஜயகாந்த். - படம்: ஊடகம்

திருவள்ளூர்: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது பெயரை தங்கள் கிராமத்தின் தெருவுக்குப் பெயராகச் சூட்டியுள்ளனர் பொதுமக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம், கீழ் மனம்பேடு பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு அந்த கிராமத்தினர், கேப்டன் விஜயகாந்த் தெரு எனப்பெயர் வைத்துள்ளனர்.

மேலும், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் அவர்கள் மரியாதை செய்துள்ளனர். கிராம மக்களின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்