மகாத்மா காந்தியின் அகிம்சை, எளிமை, சத்தியம் ஆகியன பாரதத்தின் ஆன்மா: தமிழக ஆளுநர்

1 mins read
d20d916b-71e8-401d-b4d0-01c59b53f72c
தமிழக ஆளுநர் ரவி - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மகாத்மா காந்தியின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், “மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். அவருடைய அகிம்சை, எளிமை, சத்தியம் ஆகியன பாரதத்தின் ஆன்மா,” என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதையடுத்து ஆளுநர் ரவி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்