திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இபிஎஸ்

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இபிஎஸ்

1 mins read
3cc94ab3-6feb-40ee-bcdf-8186e6ce483b
குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்த இபிஎஸ் - படம்: தமிழக ஊடகம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் திங்கட்கிழமை மாலை திருப்பதி சாமியை தரிசனம் செய்துள்ளார்.

புஷ்கரணி அருகே உள்ள வராக சாமி கோயில் மற்றும் மாட வீதியில் உள்ள ஹயக்ரீவர் கோயிலில் அவர் வழிபாடு செய்தார்.

பின்னர் அன்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கியிருந்தார். 

இதையடுத்து ஜனவரி 30ஆம் தேதி காலை அஷ்டதள பாத பத்மாராதனையில் கலந்துகொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி தரிசனம் செய்தபின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

தரிசனத்திற்குப் பின்னர், அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர் யார் விரும்பினாலும் வழிபாடு செய்யலாம் என இபிஎஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்