ஆகச்சிறந்த கோவில் யானை: முதலிடம் பிடித்த மங்களம்

ஆகச்சிறந்த கோவில் யானை: முதலிடம் பிடித்த மங்களம்

1 mins read
b2725da3-357d-473d-865c-fe30693853b0
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மங்களம் யானை. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளில் ஆகச் சிறந்ததாக கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் மங்களம் யானை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற புதுடெல்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான லோக்தந்த்ரா அவுர் ஜந்தா என்ற அமைப்பு இந்த விருதை வழங்குகிறது.

இம்முறை விருது பெறும் யானையை தேர்வு செய்வதற்கான ஆய்வு நான்கு மாதங்கள் நீடித்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.

தமிழகம் முழுவதும் 38 கோவில் யானைகள் உள்ளன. அவற்றுள் கும்பகோணம் கோவில் யானைதான் வயதானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மங்களம் யானையின் வயது 56 ஆகும்.

இதற்கு முன்பு ‘ஆக்டிவ் எலிஃபன்ட்’ என்ற விருதையும் மங்களம் யானை பெற்றிருந்தது.

வயது மூப்பின் காரணமாக மங்களம் யானைக்கு தற்போது இயற்கை மூலிகைகள் அதிகம் வழங்கப்படுகின்றன. மேலும், சில உடற்பயிற்சிகளும் கற்றுத் தரப்படுகின்றன.

வயதான யானையாக இருந்தாலும் மங்களம் யானை சிறு குழந்தையைப் போல் சுறுசுறுப்பாகச் செயல்படும் என்றும் மங்களம் யானை முதல் இடத்தைப் பிடித்தது சரிதான் என்றும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்