சென்னை: தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தாம் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக விஜய் அறிவித்ததை அடுத்து பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏராளமானோர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தமக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி,” என்று அறிக்கை ஒன்றில் விஜய் தெரிவித்துள்ளார்.

