கரூர்: தமிழகத்தில் 1,339 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை புணரமைத்து பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
“கடந்த 2022-2023 நிதியாண்டில் 113 திருக்கோவில்களில் ரூ.154 கோடி மதிப்பீட்டிலும், நடப்பு நிதி ஆண்டில் 84 திருக்கோவில்களில் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் புணரமைப்புப் பணிகள் நடந்துள்ளன.
“நடப்பு திமுக ஆட்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 12 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
“வரலாற்றுப் பாடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு கோவில்களுக்கான திருப்பணிகள் நடைபெற்றனவோ, அதே போன்று இப்போது திமுக ஆட்சிக்காலத்திலும் தமிழகம் முழுவதும் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார் அமைச்சர் சேகர் பாபு.