மாநிலங்களவையில் மன்மோகன் சிங்கை வெகுவாகப் பாராட்டி பேசிய பிரதமர் மோடி

மாநிலங்களவையில் மன்மோகன் சிங்கை வெகுவாகப் பாராட்டி பேசிய பிரதமர் மோடி

1 mins read
e19cfc03-e800-47f0-bbbf-720973d1b02c
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.க்களில் 68 பேரின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையில் முடிவடைகிறது. இதையொட்டி அவர்களுக்குப் பிரியாவிடை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை திரு மோடி வெகுவாகப் பாராட்டினார். அப்போது “மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாக்கு அளிக்க மாநிலங்களவைக்கு வந்து, ஜனநாயகத்தின் வலிமைக்கு உதவியாக இருந்தார்,” என்றார்.

மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்தியப் பிரதமராக இருந்தார். ஆறுமுறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்