திருவேற்காடு அம்மனிடம் நகை திருடிய அர்ச்சகர் தலைமறைவு

திருவேற்காடு அம்மனிடம் நகை திருடிய அர்ச்சகர் தலைமறைவு

1 mins read
42df8246-2f94-4cd7-8032-3d0983173f4b
திருவேற்காட்டிலுள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகையைத் திருடி அடகு வைத்ததாக அர்ச்சகர் ஒருவரை காவல்துறை வலைபோட்டுத் தேடி வருகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: திருவேற்காட்டில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட எட்டு சவரன் நகையைக் காணவில்லை என்று கடந்த 5ஆம் தேதி கோயில் நிர்வாகத்தில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நிர்வாகத்தினர் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில், அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலிச் சங்கிலியை அங்கு பணிபுரிந்த தற்காலிக அர்ச்சகர் சண்முகம் என்ற பாபு(40) திருடி அடகு வைத்தது தெரியவந்தது. புகாரைத் தொடர்ந்து அவர் அடகு வைத்த நகையை அந்த அர்ச்சகர் சார்பில் மீட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த அர்ச்சகர் கடந்த ஓராண்டாக இங்கு தற்காலிகமாக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. சில நாள்களாக பலரிடமும் கடன் கேட்டு வந்துள்ள நிலையில், அம்மன் கழுத்தில் இருந்த நகையைத் திருடியிருக்கிறார். தற்போது தலைமறைவாக உள்ள அவரை திருவேற்காடு காவல்துறை வலைபோட்டுத் தேடி வருகிறது.

குறிப்புச் சொற்கள்