கூட்டணி குறித்து பிரேமலதா முடிவு செய்வார்: தேமுதிக

கூட்டணி குறித்து பிரேமலதா முடிவு செய்வார்: தேமுதிக

1 mins read
227d9171-5727-4898-bf09-acd52421dda9
பிரேமலதா. - படம்: ஊடகம்

சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்பது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் 79 மாவட்டச் செயலாளர்களும் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலையும் மனதிற்கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் பலர் வலியுறுத்தியதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேமுதிகவின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், விரைவில் கூட்டணி குறித்து பிரேமலதா அறிவிக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்