தமிழகம்: முதல் திருநங்கை பயணச்சீட்டுப் பரிசோதகர்

தமிழகம்: முதல் திருநங்கை பயணச்சீட்டுப் பரிசோதகர்

1 mins read
a9e33778-4a1b-44a4-9b75-55c8c82f69db
திருநங்கை சிந்து. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திண்டுக்கல்: தமிழகத்தில் முதல் முறையாக சிந்து என்ற திருநங்கை ரயில் பயணச்சீட்டுப் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவர், தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை பயணச்சீட்டுப் பரிசோதகர் என்ற பெருமையையும் ஒருசேரப் பெற்றுள்ளார்.

கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பணியில் சேர்ந்த இவர், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிறது.

“கல்வி, உழைப்பு ஆகியவற்றின் மூலம் எத்தகைய உயரத்தையும் எட்ட முடியும். திருநங்கைகள் மனம் தளர்ந்துவிடக் கூடாது,” என்கிறார் சிந்து.

குறிப்புச் சொற்கள்