விபத்தில் மாயமான வெற்றி: விபத்துப் பகுதியில் கிடைத்த மூளைப்பகுதி; மரபணு பரிசோதனை நடத்த காவல்துறை முடிவு

1 mins read
659a40fc-74e6-4f1d-a6f0-2b2326dcbed9
வெற்றி துரைசாமி. - படம்: ஊடகம்

சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியைத் தேடும் நடவடிக்கைகள் எட்டு நாள்களாக நீடித்து வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் மனித மூளை பகுதி ஒன்றை மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளனர்.

அது யாருடையது என்பதை உறுதி செய்ய, மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கைப்பற்றப்பட்ட மூளையில் இருந்து திசுப் பகுதியும் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இரவு சைதை துரைசாமி, அவரது மனைவியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்