ரூ.20 ஆயிரம் கோடி மோசடி; கோவை நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் ஐவர் கைது

ரூ.20 ஆயிரம் கோடி மோசடி; கோவை நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் ஐவர் கைது

1 mins read
e18ff8a8-e8ba-487a-927a-67fe6d26e426
தமிழ் முரசு - படம்

கோவை: கோவையில் மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது மோசடி புகார்கள் குவிந்து வரும் நிலையில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 65 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகவும், ஏறக்குறைய ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மைவி3 ஆட்ஸ் நிர்வாக இயக்குநர் சத்தி ஆனந்தன், 51 மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சக்தி ஆனந்தனை விடுவிக்கவேண்டும், வழக்கை திரும்ப பெற வேண்டும் என நிறுவன உறுப்பினர்கள் ஐவர் ஞாயிற்றுக்கிழமை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் கோஷம் எழுப்பினர். எச்சரிக்கை விடுத்தும் கலைந்து செல்லாததால் அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்