டெல்லிக்குப் பறக்கும் அண்ணாமலை; தலைமையுடன் முக்கிய ஆலோசனை

1 mins read
bbb24d80-0124-4b95-91a2-246d7e0a3163
தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை முக்கிய ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை இம்மாதம் 16ஆம் தேதி டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை அக்கட்சி கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை. இந்த நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து அண்ணாமலை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜக நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கிறார்.

வருகிற 17 மற்றும் 18 தேதிகளில் பா.ஜ.க. சார்பாக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்