சென்னை: இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை அவர் தொதடங்கி வைத்தார்.
பின்னர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்த அமைச்சர், செய்தியாளர்களிடமும் பேசினார். அப்போது சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் 19 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
“அதே நேரம் ஓட்டுநர்களின் கவனக்குறைவும் சாலை விபத்துக்கான மிகப்பெரிய காரணம் எனவும் ஆய்வில் தெரிகிறது.
“தமிழக அரசின் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விபத்துகள் சற்று குறைந்திருந்தாலும், முற்றிலும் இல்லாத நிலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“பின் இருக்கையில் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,” என்றார் அமைச்சர் சிவசங்கர்.