வெங்காய விலை சரிந்ததால் வேதனையில் விவசாயிகள்

சென்னை: தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை தரத்திற்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.35 வரை அதிரடியாக விலை குறைந்து விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.90 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வந்தது.

வடமாநிலங்களில் பருவமழை தவறியதால் வெங்காயத்தின் உற்பத்தி கடுமையாகச் சரிந்தது. இதனால், வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், இல்லத்தரசிகள் வெங்காயத்தைப் பயன்படுத்தவே பயந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாகச் சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தைக் காட்டிலும் அதிக அளவில் சந்தைக்கு வருவதால் அதன் விலை படிப்படியாகச் சரிந்து தற்போது அதளபாதாளத்திற்குச் சென்றுள்ளது.

இப்போது தமிழ்நாட்டில் பரவலாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் தரத்திற்கு ஏற்ப ரூ.15 முதல் ரூ.35 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15 முதல் ரூ.25 வரையும் சென்னை கோயம்பேட்டில் ரூ.20 முதல் ரூ.35 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயத்தின் விலை இதுபோல் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பீட்ரூட், வெண்டைக்காய் விலையும் சரிவு

வெங்காயம் மட்டுமன்றி பீட்ரூட், வெண்டைக்காய் ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக விளைச்சல் அதிகரித்து பீட்ரூட்டின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. விவசாயிகளிடம் ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ பீட்ரூட், சந்தையில் ரூ.20 முதல் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!