ராமநாதபுரத்தில் பணம் கொழிக்கும் தொழில்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் பெரும் பணம் ஈட்டி வருகிறது அதானி நிறுவனம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 2,500 ஏக்கர் பரப்பளவில் 648 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தை அதானி நிறுவனம் அமைத்துள்ளது.

2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த மின் நிலையத்தில் தினம்தோறும் 30 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை மொத்தம் 840 கோடி யூனிட் மின்சாரத்தை இது உற்பத்தி செய்துள்ளது. ஒரு அனல் மின் நிலையம் 840 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 77 லட்சம் மெட்ரிக் டன் கார்பனை வெளியேற்றியிருக்கும்.

கமுதியில் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு மேல் அதிக சூரிய ஒளி கிடைப்பதால் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி அதிகமாக நடக்கிறது. குறிப்பாக மார்ச் முதல் மே வரை அதிக சூரிய ஒளி காரணமாக மின் உற்பத்தியும் அதிகமாக நடக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் 2.64 லட்சம் வீடுகளுக்கு மின்சாரத்தை விநியோகிக்க முடியும். இதன் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறது அதானி நிறுவனம்.

இன்னும் சில நிறுவனங்கள் ராமநாதபுரத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்கள் அமைக்க போகின்றன. வரும் காலத்தில் மின்சாரத்தில்தான் வாகனங்கள் ஓடப்போகும் நிலையில், ராமநாதபுரத்திற்கு சுக்கிர திசை தொடங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்ததால், தூத்துக்குடி போல் விரைவில் பொருளாதார மையமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!