கோவை, மதுரையில் அதிகரிக்கும் ஐடி நிறுவனங்கள்: பழனிவேல் தியாகராஜன்

1 mins read
f5dd50eb-df9b-4646-8759-9fb24caefa4b
எல்காட் நிறுவனம். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பெங்களூரு , ஐதராபாத் நகரங்களில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வருவதாகவும், வரும் 23, 24 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஐடி மாநாடு நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

கோவை விளாங்குறிச்சியில் 61.59 ஏக்கரில் 107 கோடி ரூபாய் முதலீட்டில் எல்காட் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

3,524 சதுர அடியில் அங்கு நிர்வாக கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடம் தரும் வகையில் 2.66 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால், காரமடையில் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

எல்காட் நிறுவனம் கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியதால் அவற்றை திறக்க முடியாத நிலை உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு 2.5 லட்சம் சதுர அடியில் கோவையில் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டால் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆண்டுதோறும் சராசரியாக 4-5 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் புதிதாக கட்டடம் கட்டும் நிலையில், கடந்த ஒரே ஆண்டில் சென்னையில் 11 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்