கடனைத் திருப்பித் தராததால் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்த பாஜக பெண் நிர்வாகியிடம் விசாரணை

கடனைத் திருப்பித் தராததால் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்த பாஜக பெண் நிர்வாகியிடம் விசாரணை

படம்: இந்திய ஊடகம்

15 Feb 2024 - 9:32 pm

1 mins read

திருச்சி: திருச்சியில் 6 லட்சம் கடன் வாங்கிய பெண்ணை தனது வீட்டில் இரண்டு மாதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக பெண் நிர்வாகியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள விஸ்வாஸ் நகரைச் சேர்ந்த துணை நடிகர் மதியழகன், 55. இவரது மனைவி மாலதி, 46. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் .

விஸ்வாஸ் நகரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி 55 வயது உமாராணியிடம், மாலதி 6 லட்ச ரூபாய் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். கடனைத் திருப்பி செலுத்த முடியாத காரணத்தால், உமாராணி தயது வீட்டில் இரு மாத காலமாக மாலதியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து உமாராணியின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மாலதியை மீட்டனர்.

அவரையில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுவதை மறுத்த உமாராணி, மாலதி பலடம் கடன் வாங்கி இருப்பதாகவும் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் அவரை காப்பாற்றவே வீட்டில் பாதுகாப்பாகத் தங்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

உமராணியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
கடன்விசாரணைபாஜக