மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் சட்டம் ரத்து

1 mins read
5fec6f7d-c22f-4547-a374-9c22fa5e93f1
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம். - கோப்புப்படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை போயஸ் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள ‘வேதா இல்லத்தை’ நினைவிடமாக மாற்றுவதற்கான அறக்கட்டளையை நிறுவ கடந்த 2020ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

ஆயினும், அவ்வீடு தொடர்பான வழக்கில், அவ்வீட்டின் சாவியை அவரது சட்டபூர்வ வாரிசிடம் ஒப்படைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் 2021 நவம்பர் 24ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, 2021 டிசம்பர் 11ஆம் தேதி ஜெயலலிதாவின் மருமகள் தீபாவிடம் அவ்வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், மசோதா குறித்து பேசிய மாநில தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேதா இல்லத்தின் சாவி மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனால், மேற்கூறிய சட்டம் எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டதோ அந்தச் சட்டம் வழக்கற்றுப் போனது. எனவே, அரசு சட்டத்தை ரத்து செய்ய முடிவுசெய்துள்ளது,” என்று கூறி, மசோதாவைத் தாக்கல் செய்தார்.

அதன்பின், சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்