சென்னை: ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் 35 நாள்களில் 3.50 லட்சம் பேரின் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதற்காக மொத்தம் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையேற்ற அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


