தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விருதுநகரில் சோகம்: பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் பலி

2 mins read
335964e8-ab10-4e58-af15-c99ca5949969
விபத்தில் ஆலையில் இருந்த நான்கு அறைகள் இடிந்து தரைமட்டமாயின. - படம்: ஊடகம்
multi-img1 of 3

விருதுநகர்: பட்டாசு ஆலையில் நிகழ்ந்த கோர வெடி விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் நிகழ்ந்துள்ளது.

விஜய் என்பவர் அங்குள்ள ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார் .

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மத்திய பெட்ரோலிய, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இந்த ஆலை இயங்கி வருவதாகத் தெரிகிறது.

ஆலையில் 74 அறைகள் உள்ளன என்றும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தொழிலாளர்கள் அனைவரும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள ஓர் அறையில் திடீரென தீப்பற்றியது. அடுத்த சில நிமிடங்களில் அந்தத் தீ ஆலை முழுவதும் மிக வேகமாகப் பரவியது.

இதனால் ஆலையில் உள்ள சில அறைகளில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்களும் பட்டாசுகளும் சரமாரியாக வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் ‘ஏசியாநெட் தமிழ்’ ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். கடும் போராட்டத்திற்குப் பிறகே அவர்களால் தீயை அணைக்க முடிந்தது என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

வெடிபொருள் உராய்வு காரணமாக இந்த திடீர் விபத்து ஏற்பட்டது என்றும் நான்கு அறைகளில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் அனைத்தும் இந்த விபத்தில் முற்றிலுமாக வெடித்துச் சிதறிவிட்டன என்றும் ஆலை தரப்பில் கூறப்படுகிறது. விபத்தின்போது அந்த நான்கு அறைகளும் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.

இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த ஆலையைப் பார்வையிட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், இந்த விபத்துக்கு மனிதத்தவறே காரணம் என்று தெரிவித்தார்.ந்நிலையில், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விபத்துதீ விபத்து