‘தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழ்வோம்’

1 mins read
57a9a550-f64e-4c80-b19e-231ea0b6b40e
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: மொழியால் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒற்றுமையாக வாழ்ந்து, மாநிலத்தையும் வளர்த்து, இந்திய நாட்டையும் செழிக்க வைப்போம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிட்டார்.

சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக நடப்பு திமுக அரசு உள்ளது என்றும் சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது என்றும் அவர் கூறினார். சிறுபான்மையினர் நலனுக்காகப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

“முன்பு சிறுபான்மையினரைக் கொண்ட அமைப்புகள் காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினர். அப்போது, ‘என்னை உங்களில் இருந்து பிரித்துப் பார்த்து நன்றி சொல்லாதீர்கள், நான் என் கடமையைத்தான் செய்தேன்’ என்றார் கருணாநிதி. அத்தகைய எண்ணத்துடன்தான் நானும் செயல்படுகிறேன்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்