மதுபோதை: கார் ஓட்டிச்சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலி

மதுபோதை: கார் ஓட்டிச்சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலி

1 mins read
073f7bd9-dc12-4639-8223-45f4b9cd5093
இரு மாணவர்களும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.  - கோப்புப்படம்: ஊடகம்

சேலம்: மதுபோதையில் அதிவேகமாகக் கார் ஓட்டிச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிர் இழந்தனர்.

இச்சோக சம்பவம் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே நிகழ்ந்துள்ளது.

புதுவை மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான கவுதம், காம்கோ ஆகிய இரு மாணவர்களும் விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் உள்ள பெற்றோரைப் பார்க்கக் காரில் சென்றுள்ளனர்.

முன்னதாக இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. போதையில் காரை வேகமாக இயக்கிய நிலையில் பனமரத்துப்பட்டி அருகே அது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

நள்ளிரவு வேளையில் நிகழ்ந்த இந்த விபத்தில் அந்தக் கார் அப்பளம் போல் நொறுங்கிப்போனது. இதில் கவுதம், கான்கோ ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அவர்களுடன் பயணம் மேற்கொண்ட மற்றொரு மாணவரான சரண் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்