தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தை கடத்தல் வதந்தி: காவல்துறை எச்சரிக்கை

1 mins read
7aed3f1a-c41c-4bf0-b2d9-df8ca2b728f9
குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை. - படம்: ஊடகம்

சென்னை: குழந்தை கடத்தல் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

குழந்கைகளைக் கடத்த முயற்சி செய்வதுபோன்ற சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அண்மைக் காலமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடத்தல் தொடர்பாகப் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் காவல்துறை உதவி எண்கள் 110, 112 ஆகியவற்றைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் உண்மை நிலவரத்தைக் கேட்டறியலாம் என்றும் காவல்துறை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்