தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைக்கவசம் அணியாத காவலர்கள்: ரோஜாக்கள் விநியோகிக்க உத்தரவு

1 mins read
10adfc3b-0911-44ad-ad4c-d52a45925722
ரோஜாக்கள் வழங்கும் காவலர்கள். - படம்: ஊடகம்

காரைக்கால்: தலைக்கவசம் அணியாத காவலர்களுக்கு காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நூதன தண்டனை வழங்கியுள்ளார்.

இதையடுத்து இரவு வேளையில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு அக்காவலர்கள் ரோஜா பூக்களை வழங்கினர்.

வெள்ளிக்கிழமை காரைக்கால் நகர்ப்பகுதியில் அம்மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனீஷ், சுற்றுக்காவல் பணியை மேற்பார்வையிட்டார்.

அப்போது இரு காவலர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வதைக் கண்ட அவர், இருவரையும் தமது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.

காவலர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாததற்காக வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இரு காவலர்களுக்கும் நூதன தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி காரைக்கால் புதிய பேருந்து நிலைய போக்குவரத்து சிக்னலில் நின்று அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு இரு காவலர்களும் ரோஜாப்பூக்களை வழங்கினர்.

மேலும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் இருவரும் எடுத்துரைத்தனர்.

குறிப்புச் சொற்கள்