தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்சிப் பெயரில் திடீர் மாற்றம் செய்த விஜய்; நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை

1 mins read
f89c8088-6e06-40ea-86dd-73370ea9e2b8
விஜய். - படம்: ஊடகம்

சென்னை: அரசியல் கட்சி தொடங்கிய சில நாள்களிலேயே அதன் பெயரில் சிறு மாற்றம் செய்துள்ளார் நடிகர் விஜய்.

அண்மையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்குவதாக விஜய் அறிவித்தார்.

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் தனது கட்சியின் கொடி, சின்னம் ஆகியவை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘தமிழக வெற்றி கழகம்’ என்று அறிவிக்கப்பட்ட கட்சிப் பெயரில் ‘க்’ என்ற எழுத்து விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

பெயரிலேயே தவறு இருப்பது சரியல்ல என்று அவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து விஜய்யின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது.

அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் பெயர் மாற்றத்துடன் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இதற்கிடையே, கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகம் பிப்ரவரி 19ஆம் தேதி (இன்று) ஆலோசனை நடத்த உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடவில்லை என்றாலும் அக்கட்சி தொடங்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் ரசிகர்கள், மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்