சென்னை: அதிமுக கூட்டணியில் இணைவதை பாமகவும், தேமுதிகவும் உறுதி செய்துவிட்டதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தேர்தல் ஒப்பந்தப்படி பாமகவுக்கு 7 தொகுதிகளும் மாநிலங்களவையில் ஒரு இடமும் ஒதுக்கப்பட இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு 14 தொகுதிகளை தரும் கட்சியுடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று கூறிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தனது நிலைபாட்டில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளார் என கூறப்படுகிறது.
அக்கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது ஓரிறு நாள்களில் தெரிந்து விடும் என இருதரப்பு நிர்வாகிகள் கூறுகின்றனர். பாமகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாகவும் மாநிலங்களவை தொகுதி உறுதியானதால் பாமக, அதிமுக கூறியதை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பாமகவை தங்கள் வசம் இழுக்க பாஜக தலைமை தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தமிழக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

