தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்.வி. சேகருக்கு 1 மாதம் சிறை, ரூ.15,000 அபராதம்

1 mins read
5ecce121-d214-42e4-801b-9a287e2cf998
எஸ்.வி.சேகருக்கு சிறை, அபராதம் - படம்: இணையம்

சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறையும் ரூ.15,000 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பல கட்டங்களாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்து திங்கட்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், புகார் குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை, ரூ.15,000 அபராதமும் விதிப்பதாக அவர் தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்